உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் சேதத்தால் பீதியில் நோயாளிகள்

அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் சேதத்தால் பீதியில் நோயாளிகள்

கரூர் : கரூர் டவுன் பழைய அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் சேதம் அடைந்துள்ளது. இதனால், பொதுமக்கள், நோயாளிகள் பீதியடைந்துள்ளனர்.கரூர்-வாங்கல் சாலை பழைய கலெக்டர் அலுவலகம் அருகே, பல ஆண்டுகளாக தாலுகா மற்றும் அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், 2020ல் கரூர் அருகே, காந்தி கிராமத்தில் புதிதாக மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை, அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்., திறந்து வைத்தார்.இதையடுத்து, கரூர் டவுன் அரசு மருத்துவமனையில் இருந்து, சித்தா மருத்துவ பிரிவை தவிர மற்ற பிரிவுகள் அனைத்தும், புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.தற்போது, பழைய அரசு மருத்துவமனையில், சித்தா பிரிவு, ஆயுர்வேத சிகிச்சை, இயற்கை மருத்துவ பிரிவுகள் மட்டும் செயல்படுகின்றன.இந்நிலையில், பழைய அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. இதனால், பொதுமக்கள், நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, கரூர் டவுன் பழைய அரசு மருத்துவமனை சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை