உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலைகளில் கால்நடைகள் சுற்றிதிரிந்தால் உரிமையாளருக்கு அபராதம்; கலெக்டர்

சாலைகளில் கால்நடைகள் சுற்றிதிரிந்தால் உரிமையாளருக்கு அபராதம்; கலெக்டர்

கரூர், டிச. 8-'கால்நடைகள் தெருக்கள், சாலைகளில் திரிந்தால், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்' என, கலெக்டர் தங்கவேல் எச்சரித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:தெருக்கள் மற்றும் சாலைகளில் உணவு தேடி கால்நடைகளை திரிய அனுமதிக்கும், உரிமையாளர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படும். இறைச்சி அறுவை கூடங்களில் கால்நடை மருத்துவர்களின் சான்றிதழ் பெற்ற கால்நடைகளை மட்டுமே வதை செய்ய வேண்டியது அவசியம். பொது இடங்களில் கால்நடைகளை கொல்வதும், மனிதாபிமானமற்ற முறையில் உணவிற்காக வதை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. பால் கொடுக்கும் மற்றும் பால் குடித்து கொண்டிருக்கும் நிலையில் கால்நடைகளையும், நோய் வாய்ப்பட்ட கால்நடைகளையும் வதை செய்ய கூடாது.இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை