உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஓய்வூதியர் சங்க கூட்டம்

ஓய்வூதியர் சங்க கூட்டம்

கரூர் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்கம், மாநகர கிளை கூட்டம் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.அதில், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய மருத்துவ திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். குழு காப்பீடு திட்டத்தில் ஓய்வூதியர் இறந்தால், உதவித்தொகையாக, 50 ஆயிரம் ரூபாய் என்பதை, ஒன்றரை லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், துணைத்தலைவர் அகமது கபீர், செயலாளர் சேகர், பொருளாளர் ரகுநாதன் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !