உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிமென்ட் கலவை போட்டு பல நாளாகியும் தார்ச்சாலை போடாததால் மக்கள் அவதி

சிமென்ட் கலவை போட்டு பல நாளாகியும் தார்ச்சாலை போடாததால் மக்கள் அவதி

கரூர், கரூர் அருகே, சிமென்ட் கலவை போட்டு பல நாட்களாகியும், தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதனால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளது.கரூர் மாநகராட்சி, தான்தோன்றிமலை சக்திபுரம் பகுதியில் சில நாட்களுக்கு முன், புதிதாக தார்ச் சாலை அமைக்க சிமென்ட் கலவையுடன், ஜல்லிக்கற்கள் போடப் பட்டது.அந்த பகுதியில் அதிகளவில் வீடுகள் உள்ளது. ஆனால், உரிய நேரத்தில் சக்திபுரம் பகுதியில் தார்ச்சாலை அமைக்கவில்லை.இந்நிலையில், சிமென்ட் கலவை பெரும்பாலும் கரைந்து விட்டதால், ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறியுள்ளன. இதனால், அதன் வழியாக பொதுமக்கள் நடந்து கூட, செல்ல முடியாமல் பெரும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, டூவீலர்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தான்தோன்றி மலை சக்திபுரம் பகுதியில், சிமென்ட் கலவை போடப்பட்ட தெருக்களில், உடனடியாக தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை