உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரயில்வே குகை வழிப்பாதையில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி

ரயில்வே குகை வழிப்பாதையில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி

குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மருதுார்-மேட்டு மருதுார், பணிக்கம்பட்டி சாலையில், கடந்தாண்டு ஜூன், 20ல் ரயில்வே குகை வழிப்பாதை பணி தொடங்கியது. மூன்று மாதங்-களுக்குள் பணியை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விடுவதாக, ரயில்வே நிர்வாகம் சார்பில் தகவல் பலகையில் தெரிவித்திருந்-தனர். ஆனால், குகை வழிப்பாதை பணி ஆமை வேகத்தில் நடந்து வந்தது. பணியை விரைந்து முடிக்காத, ரயில்வே நிர்வா-கத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து, குகை வழிப்பாதை பணியை தொடங்கினர்.இந்நிலையில், மருதுார் ரயில்வே குகை வழிப்பாதை பணி முடி-யாததால், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், ரயில்வே குகை வழிப்பாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். எனவே, பொதுமக்கள் பாதிக்காத வகையில், ஒப்பந்ததாரர் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு விட வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி