உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மோசமான சாலையால் மக்கள் கடும் அவதி

மோசமான சாலையால் மக்கள் கடும் அவதி

கிருஷ்ணராயபுரம்: மேட்டுப்பட்டி பகுதிகளில் இருந்து, தாளியாம்பட்டி வரை செல்லும் தார் சாலை மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, மேட்டுபட்டி அய்யர்மலை பிரிவு சாலை முதல் தாளியாம் பட்டி பிரிவு வரை, தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மழை காரணமாக, சாலையின் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் போது தடுமாறுகின்றனர். எனவே, சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி