உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலையில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றிட மக்கள் எதிர்பார்ப்பு

குளித்தலையில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றிட மக்கள் எதிர்பார்ப்பு

குளித்தலை:குளித்தலை நகராட்சி பஸ் ஸ்டாண்டில், எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து, பஸ்கள் வரும் பாதை மற்றும் பஸ் வெளியே செல்லும் பாதையில், மூன்று வளைவுகள் கட்டப்பட்டு, திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.இந்நிலையில், கரூர் - திருச்சி நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள காந்தி சிலை, பஜனை மடம், பெரியபாலம், கடைவீதி, ரயில் நிலைய சாலை, அண்ணா நகர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில், சிலர் கடைகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. குளித்தலையில், சாலையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றிட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ