மேலும் செய்திகள்
அமராவதி ஆற்றில் வெள்ளம்: தரைப்பாலங்கள் மூழ்கின
14-Dec-2024
கரூர், டிச. 26-கரூர் அருகே, அமராவதி ஆற்றுப்பாலத்தில் சேதமடைந்துள்ள தரைப்பாலத்தை, சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் நகரம்-பசுபதிபாளையம் பகுதிகளை இணைக்கும் வகையில், ஐந்து சாலை பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே, சில ஆண்டுகளுக்கு முன்பு, புதிதாக உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. புதிய பாலத்தின் கட்டட பணிகள் துவங்கிய போது, அமராவதி ஆற்றில் மக்கள் செல்லும் வகையில், தரைப்பாலம் கட்டப்பட்டது. அந்த பாலத்தை, ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் மழை காரணமாக தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. குறிப்பாக, பாலம் அமைக்க போடப்பட்ட ராட்சத குழாய்கள் வெளியே தெரிகிறது. இதனால், அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள், சேதமடைந்துள்ள தரைப்பாலத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.எனவே, தரை மட்ட பாலத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
14-Dec-2024