மேலும் செய்திகள்
தென்னிலையில் பஸ் ஸ்டாப் இன்றி மக்கள் அவஸ்தை
18-Jun-2025
கரூர், கரூர் அருகே, சேதமடைந்த நிலையில் உள்ள நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாநகராட்சி, எஸ்.வெள்ளாப்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன், நிழற்கூடம் கட்டப்பட்டது. அதை சணப்பிரட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, கரூர் டவுன் பகுதிகளுக்கு, பஸ்களில் செல்லும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் பயணிகள் நிழற்கூடம் அருகே, முட்புதர்கள் அதிகளவில் முளைத்து, சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், பயணிகள் அச்சத்துடன் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். கரூரில் மழை தொடங்கிய நிலையில், சேதமடைந்த பயணிகள் நிழற்கூடத்தை உடனடியாக சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
18-Jun-2025