வாலாந்துார் கிராமத்தில் குப்பை அகற்றிட மக்கள் வலியுறுத்தல்
வாலாந்துார் கிராமத்தில் குப்பைஅகற்றிட மக்கள் வலியுறுத்தல்குளித்தலை, செப். 28-குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்.,வாலாந்துார் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தெருக்களில், பல மாதங்களாக குப்பை அள்ளப்படாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது.மேலும், தெருவில் உள்ள சில மின்விளக்குகள் எரியவில்லை. இதுகுறித்து பலமுறை பஞ்., மற்றும் யூனியன் ஏ.பி.டி.ஓ.,விடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.