மேலும் செய்திகள்
பைக் டாக்சி விவகாரம் ராமலிங்க ரெட்டி விளக்கம்
14-Aug-2025
கரூர், கோவில் திருவிழாவில் கிடா வெட்ட அனுமதிக்க வேண்டும் என, கடவூர் அருகேயுள்ள மேலப்பகுதி கிராம மக்கள், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது:கடவூர் அருகே மேலப்பகுதி மதுரை வீரன் கோவிலில், உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின் படி, 17 முதல், 21 வரை திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், சினை பிடித்த ஆடுகள் மட்டுமே வெட்டக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கிடா வெட்டக் கூடாது என்று போலீசார் கூறுகின்றனர். குல தெய்வத்திற்கு கிடா வெட்டுவது மரபாகும்.இங்கு, தேவையில்லாமல் பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த தடையால், எங்களின் நேர்த்திக்கடன் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கிடா வெட்ட அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.
14-Aug-2025