மேலும் செய்திகள்
அடிப்படை வசதியின்றி சுப்ராயல் நகரில் அவதி
22-Jan-2025
அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட, டி.எம்.ஹச்., நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இப்பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு சரியான சாலை வசதி, கழிவுநீர் கால்வாய், மின்விளக்-குகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மூன்று மாதங்களுக்கு முன், திறந்தவெளி கழிவுநீர் கால்வாயில் விழுந்து மாணவர் ஒருவர் உயிரிழந்தார். பல மாதங்களாகியும், திறந்த வெளி கால்வாய்கள் மூடப்படாமல் உள்ளது.இந்த கோரிக்கைகளை, நகராட்சி தலைவர் முனவர் ஜான் நேரில் ஆய்வு செய்து, விரைவில் தீர்வு காண வேண்டும் என, இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
22-Jan-2025