மேலும் செய்திகள்
உடைந்த மின்கம்பத்தால் விபத்து அபாயம்
09-Jun-2025
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில், சாலையின் நடுவில் உள்ள, மின் கம்பத்தை அகற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட, மூன்றாவது வார்டில் கலைவாணர் தெரு அமைந்துள்ளது. இப்பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும் மக்கள், தமிழ்நாடு மெடிக்கல் பின்புறம் உள்ள சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் இச்சாலையில் சைக்கிளில் சென்று வருகின்றனர். ஆனால், சாலை நடுவே மின்கம்பம் அமைந்துள்ளதால், எதிரே வாகனங்கள் வரும்போது நிலை தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. மேலும் சாலையை கடந்து செல்ல, பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சாலை நடுவே இருக்கும் மின் கம்பத்தை, சாலையோரத்துக்கு மாற்றி அமைத்து தர வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
09-Jun-2025