புதிய தார்ச்சாலையில் விளக்குகள் அமைக்க மக்கள் வேண்டுகோள்
கரூர், கரூர் அருகே, புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலையில், மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாநகராட்சி, வெங்கமேடு காமதேனு நகர் முதல் வாங்கல் சாலை வரை, சமீபத்தில் புதிதாக தார்ச்சாலை மற்றும் இரண்டு பக்கமும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் சமீபத்தில் நடந்தன. இதனால், அந்த சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில், பொதுமக்கள் நடை பயிற்சி சென்று வருகின்றனர்.புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்ட நிலையில், இரு பக்கமும் விவசாய நிலங்கள் உள்ளன. இதனால், புதிய தார்ச்சாலையில் மின் விளக்குகள் இல்லாததால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உலா வருகிறது. இதனால், அந்த வழியாக டூவீலரில் செல்வோர் மற்றும் நடை பயிற்சி செல்லும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, வெங்கமேடு காமதேனு நகர் முதல் வாங்கல் சாலை வரை, புதிதாக அமைக்கப்பட்டுள்ள, தார்ச்சாலையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.