மேலும் செய்திகள்
மொபட் மீது வேன் மோதி முதியவர் பலி
17-Jun-2025
கரூர், க.பரமத்தி அருகே, தார்ச்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர்.கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை, க.பரமத்தி அருகே பவித்திரம் பிரிவில் இருந்து, பாலமலை, புன்னம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு தார்ச்சாலை செல்கிறது. அந்த சாலையில், பிரசித்தி பெற்ற பாலமலை பாலசுப்பிரமணி சுவாமி கோவில் உள்ளது. இந்நிலையில், பாலமலைக்கு செல்லும் சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதுகுறித்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.மேலும், கோவை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள், இந்த வழியாக செல்கின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் குண்டும், குழியுமாக உள்ள, சாலையில் விழுந்து காயமடைகின்றனர். எனவே, பாலமலை செல்லும் சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
17-Jun-2025