வெங்கமேடு ரயில்வே மேம்பாலத்துக்கு படிக்கட்டுகள் கட்ட மக்கள் வலியுறுத்தல்
கரூர்: கரூர் அருகே, வெங்கமேட்டில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்-பாலத்தின் கீழே, படிக்கட்டுகள் கட்ட வேண்டும் என, பொது-மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கரூர் வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் முன், சேலம், நாமக்கல் பகுதியில் இருந்து வாகனங்கள் வெங்கமேடு வழியாக கரூர் நகருக்கு செல்லும். அப்போது, வெங்கமேடு பகுதியில் ரயில்வே கேட் போடப்படும் நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால், வெங்கமேட்டில் ரயில்வே மேம்-பாலம் அமைக்க, கரூர் நகர மக்கள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து கடந்த, 2006ல் வெங்கமேட்டில் கட்டப்பட்ட புதிய ரயில்வே மேம்பாலத்தை, அப்போதைய ரயில்வே துறை இணை அமைச்சர் வேலு திறந்து வைத்தார். ஆனால், ரயில்வே பாதையை பொதுமக்கள் கடந்து செல்வதை தடுக்கும் வகையில், கீழ்பகுதியில் இருந்து மேம்பாலத்துக்கு செல்ல, படிக்கட்டுகள் அமைக்கப்படவில்லை.இதனால், வெங்கமேடு மற்றும் கரூர் பகுதிகளை சேர்ந்த பொது-மக்கள், பள்ளி மாணவ, மாணவியர், ஆபத்தான நிலையில் ரயில்வே இருப்பு பாதையை கடந்து செல்கின்றனர். அப்போது, ரயிலில் சிலர் எதிர்பாராதவிதமாக அடிபட்டு இறக்கின்றனர். வெங்கமேட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு, 19 ஆண்-டுகள் ஆன நிலையிலும், பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக படிக்கட்டுகள் அமைக்கப்படவில்லை.எனவே, வெங்கமேடு ரயில்வே இருப்பு பாதை பகுதியில் ஏற்-படும் விபத்துகளை தடுக்க, மேம்பாலத்துக்கு படிக்கட்டுகள் அமைக்க, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.