மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி மறியல் போராட்டம்
19-Dec-2024
கரூர்: கரூர் அருகே, நெரூரில், அரசு காலனி-, பஞ்சமாதேவி-, நெரூர் சாலை மேம்பாட்டு பணிக்கு பூமி பூஜை, நேற்று நடந்தது.மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். அப்-போது, எம்.ஜி.ஆர்., நகர் அருகே உள்ள டாஸ்மாக் கடையை, நெரூர் பார்க் நகருக்கு இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து,அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:கரூர் ஊராட்சி ஒன்றியம், நெரூர் தென்பாகம் பஞ்சாயத்துக்குட்-பட்ட எம்.ஜி.ஆர்., நகர் அருகே, டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடையை, நெரூர் வடபாகம் பஞ்சாயத்துக்குட்-பட்ட பார்க் நகர் பஸ் ஸ்டாப் அருகே மாற்ற உள்ளனர்.கடந்த, 24ல் டாஸ்மாக் அமைக்கப்படும் இடத்தில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது, அமையும் இடமானது கரூரிலிருந்து நெரூர் செல்லும் மெயின் ரோட்டில் உள்ளது.இதனால், அடிக்கடி விபத்து, உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருப்-பதால் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பின்மை பிரச்னையும் ஏற்படும்.எனவே, டாஸ்மாக் கடையை இங்கு இடமாற்றம் செய்யக்கூ-டாது. இதற்கு நிரந்தர தீர்வாக நெரூர் எம்.ஜி.ஆர்., நகரில் செயல்-பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
19-Dec-2024