செல்லாண்டியம்மன் கோவில் அம்மன் சிலையை கண்டுபிடித்து தர கோரி மனு
கரூர்: நொய்யல், செல்லாண்டியம்மன் கோவிலின் பழமையான அம்மன் சிலையை காணவில்லை. அதனை கண்டுபிடித்து தர வேண்டும் என, இந்து சமத்துவ கட்சியினர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: நொய்யல், செல்லாண்டியம்மன் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இங்கு, மிகவும் பழமையான நவபாஷான அம்மன் சிலை இருந்தது. தற்போது சிலையை காணவில்லை. அம்மன் சிலை எங்குள்ளது என, இந்துசமய அறநிலைதுறையினர் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால், திருட்டு போய் விட்டதாக என சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக சிலை எங்கு உள்ளது என்பதை தெரியப்படுத்த வேண்டும் அல்லது கணவில்லை என்றால் சிலையை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், பழைய சிலையை போல புதிய சிலை செய்து இருக்கிறோம். அதனை, பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்க வேண்டும். வரும் பிப்., 3 ல் செல்லாண்டியம்மன்கோவில் கும்பாபி ேஷகம் நடக்கிறது. இருதரப்பினர் இடையில் பிரச்னை இருப்பதால், அவர்களிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.