அறுவை சிகிச்சை செய்தவருக்கு தவி கோரி கலெக்டரிடம் மனு
கரூர்: மூளை அறுவை சிகிச்சை மேற்கொண்ட மகனுக்கு உதவி கோரி, சாந்தப்படியை சேர்ந்த செல்வராஜ், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தார்.அதில், கூறியிருப்பதாவது:அரவக்குறிச்சி அருகில் சாந்தப்படியில் வசித்து வருகிறோம். எனது, 20 வயது மகன் அரிவாசுக்கு, மூன்று ஆண்டுகள் மூளை ரத்த கசிவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரால் எந்த வேலைக்கும் செல்ல முடியாத சூழல் உள்ளது. அவரது அன்றாட வேலைக்கு, மற்றொருவர் உதவி தேவைப்படுகிறது. அரிவாசுவின் மருத்துவ மற்றும் பராமரிப்பு செலவு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை செலவாகிறது. மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதால், இந்த செலவுகளை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். எங்கள் நிலையை கருத்தில் கொண்டு அரசின் சார்பில் நிதி உதவி வழங்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.