மனுக்கள் வெறும் காகிதம் அல்ல அமைச்சர் மதிவேந்தன் அறிவுரை
கரூர்: ''பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் வெறும் காகிதம் அல்ல, அது அவர்களுடைய ரத்தம், வியர்வை,'' என அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பள்ளமருதப்பட்டி, எல்லைமேட்டுபுதுார், டி.வெங்கடாபுரம், குளம்நகர், செல்வநகர் ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்-துறை அமைச்சர் மதிவேந்தன், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டு பேசியதாவது:பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் வெறும் காகிதம் அல்ல, அது அவர்களுடைய ரத்தம், வியர்வை. எனவே, அரசு அலுவலர்கள் அதனை தனி கவனம் செலுத்தி, பரிசீலித்து அதற்கு உரிய தீர்வு-களை விரைவாக வழங்க வேண்டும். கோரிக்கை மனுக்களை, 30 நாட்களில் பரிசீலித்து, தீர்வுகாண வேண்டும். மேலும் தமிழ் முதல்வன், புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம், மகளிர் உரிமை தொகை உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்ப-டுத்தப்பட்டு வருகிறது. மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சார்பில், 25 முகாம் மூலம், 11,038 மனுக்கள் பெறப்பட்டுள்-ளது. இவ்வாறு பேசினார்.முகாமில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), டி.ஆர்.ஓ., கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், உதவி ஆணையர் (கலால்) கருணா-கரன் உள்பட பலர் பங்கேற்றனர்.