புனித பயணம் செல்ல மானியம்
கரூர், கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டை சேர்ந்த, 150 புத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு, நாக்பூர் தீக் ஷாவில், விஜயதசமி அன்று தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயணம் மேற்கொள்ள, 5,000 ரூபாய் வரை நேரடியாக மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்ப படிவங்களை www.bcmbcmw.tn.gov.inஎன்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, நவ.,30க்குள் சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை -5 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.