வயல்களில் நெற் பயிர்கள் நடவு
வயல்களில் நெற் பயிர்கள் நடவுகிருஷ்ணராயபுரம், செப். 20-வல்லம் கிராமத்தில், வயல்களில் நெற்பயிர்கள் நடவு பணிகள் தீவிரமாக நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து திருச்சி மற்றும் புதுக்கோட்டை வரை கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. இதில் வரும் தண்ணீரை பயன்படுத்தி, விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது காவிரி ஆற்றில், நீர் வரத்து காரணமாக பாசன வாய்க்காலில் கூடுதல் நீர் செல்கிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தி, விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை துவங்கி உள்ளனர். கடந்த வாரத்தில் இருந்து, நெல் சாகுபடி செய்யப்படும் விளை நிலங்களை, டிராக்டர் இயந்திரம் கொண்டு உழவு பணிகள் செய்யப்பட்டது. பின் வயல்கள் சமன்படுத்தப்பட்டது. தற்போது நாற்றங்களில் இருந்து பறிக்கப்பட்ட நெற் பயிர்கள், விவசாய தொழிலாளர்களை கொண்டு நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.