உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோவில் தெப்பக்குளத்தில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பை

கோவில் தெப்பக்குளத்தில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பை

கோவில் தெப்பக்குளத்தில்தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பைகரூர், நவ. 28-கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் தெப்பக்குளத்தில், மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும்.கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண பெருமாள் கோவிலுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதிக்கு சென்று தரிசிக்க முடியாதவர்களும், வயதானவர்களும், தான்தோன்றிமலையில் உள்ள பெருமாளை தரிசனம் செய்யலாம் என்பது கோவிலின் தனி சிறப்பு. தினமும் நான்கு கால பூஜைகள் நடக்கும் இந்த கோவில், 12ம் நுாற்றாண்டை சேர்ந்தது என்றும், இது ஒரு குடைவரை கோவில் என்றும் கூறப்படுகிறது.கோவிலுக்கு எதிரில் தெப்பக்குளம் உள்ளது. ஆண்டுதோறும் மாசி மகத்தில் தெப்ப உற்சவம் நடப்பது வழக்கம். தற்போது தெப்பக்குளத்தில் ஏராளமான குப்பை கழிவுகள் மிதக்கின்றன. கோவில் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை, பல்வேறு இடங்களில் வீசி செல்கின்றனர். அவை காற்றில் பறந்து கோவில் குளத்தில் விழுகிறது. தற்போது, பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் ஆங்காங்கே மிதக்கின்றன. குளத்தில் ஏராளமான மீன்கள் வசிப்பதால் இதனால் அவைகளுக்கு ஆபத்து ஏற்படும். எனவே, குளத்தில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உடனே அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோவிலை சுற்றி குப்பை கொட்ட தொட்டிகள் வைத்தால், அதில் பக்தர்கள் போடுவதற்கு சுலபமாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை