நாளை பா.ம.க., தலைவர் அன்புமணி நடைபயணம்
கரூர், கரூருக்கு, நாளை (28ல்) பா.ம.க., தலைவர் அன்புமணி வருகிறார்.தமிழகம் முழுவதும், பா.ம.க., தலைவர் அன்புமணி உரிமை மீட்க, தலைமுறை காக்க என்ற பெயரில், சட்டசபை தொகுதி வாரியாக நடை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். கரூர் சட்டசபை தொகுதியில் நாளை மாலை, 4:00 மணிக்கு, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே இருந்து புறப்பட்டு, தலைமை தபால் நிலையம், ஜவஹர் பஜார், மனோகரா கார்னர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக திருச்சி சாலையில் உள்ள, உழவர் சந்தை பகுதியை சென்றடைகிறார்.பிறகு, அங்கு நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில், பா.ம.க., தலைவர் அன்புமணி பேச உள்ளார். ஏற்பாடுகளை, கரூர் மேற்கு மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.