உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாணவிக்கு தொல்லை தொழிலாளிக்கு போக்சோ

மாணவிக்கு தொல்லை தொழிலாளிக்கு போக்சோ

குளித்தலை:குளித்தலை அடுத்த கடவூரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 34; விவசாய தொழிலாளி. இவர், அப்பகுதியை சேர்ந்த, 17 வயது மாணவியை, அவரது பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் சென்று, மிரட்டி பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இதுகுறித்து கூறினால், குடும்பத்துடன் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.ஆனால், பாதிக்கப்பட்ட மாணவி, பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகார்படி, குளித்தலை மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, ரஞ்சித்குமாரை கைது செய்து, கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ