விஷ ஜந்துக்கள் நடமாட்டம் முட்செடிகளை அகற்றலாமே
குளித்தலை :கோவிலுக்கு சொந்தமான இடத்தில் படர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும்.குளித்தலை கடம்பர்கோவிலுக்கு சொந்தமான நிலம், குளித்தலை நகராட்சி புறவழிச்சாலை அருகில், 3 ஏக்கர் காலி இடம் நகருக்குள் உள்ளது. இந்த இடத்தில் சீமை கருவேல மரங்கள், புல், செடி, கொடிகள் படர்ந்து அடர்ந்த காடு போன்று உள்ளது. இங்குள்ள பாம்பு, தேள் உள்ளிட்ட விஷஜந்துக்கள் அடிக்கடி வீட்டுக்குள் புகுந்து விடுகிறது.மேலும், அடர்ந்த இடத்தில் சமூக விரோதிகளின் புகலிமாகவும் உள்ளது. எனவே, முற்செடிகளை கோவில் நிர்வாகம் சார்பில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.