உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனைவி கத்தியால் குத்தி கொலை கணவரை கைது செய்த போலீஸ்

மனைவி கத்தியால் குத்தி கொலை கணவரை கைது செய்த போலீஸ்

குளித்தலை, குளித்தலை அருகே, மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த பட்டவர்த்தி கிராமத்தை சேர்ந்த அஜய், 30, கார் டிரைவராக உள்ளார். இவருடைய மனைவி சுருதி, 27, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த, 19ம் தேதி இரவு தம்பதியரிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனைவியை அஜய் கடுமையாக தாக்கினார்.படுகாயமடைந்த சுருதி, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு, மனைவியை பார்க்க சென்ற அஜய், திடீரென கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பினார். இதில் ரத்த வெள்ளத்தில் சுருதி இறந்தார்.இதற்கிடையில் குளித்தலை போலீசார், அஜயின் தந்தையான முன்னாள் டி.எஸ்.பி., ராமசாமியை பிடித்து வந்து, போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்தனர். தந்தை போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதை அறிந்த சென்னையில் இருந்த மற்றொரு மகன் அருண், தம்பி என்னை பார்ப்பதற்காக பைக்கில் வருகிறார். வந்தவுடன் கட்டாயம் போலீசில் ஒப்படைப்பதாக போலீசாரிடம் உறுதியளித்தார். இதையடுத்து, அவரை தந்தையை போலீசார் விடுவித்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சென்னையில் உள்ள அண்ணன் அருணிடம் சென்று நீதிமன்றத்தில் சரண் அடைய, அஜய் குமாரமங்கலம் பிரிவு சாலையில் பஸ்சுக்காக நின்று கொண்டு இருந்தார்.அப்போது அவரை கைது செய்தோம்' என்றனர். கைது செய்யப்பட்ட அஜய், குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி