உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு

கரூர்: கரூர் அருகே, மாட்டு வண்டியில் மணல் கடத்தியதாக, இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கரூர் மாவட்டம், வெங்கமேடு போலீஸ் எஸ்.ஐ., ஆர்த்தி உள்-ளிட்ட போலீசார் நேற்று முன்தினம், பாலம்மாள்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அமராவதி ஆற்றுப்பகுதியில் இருந்து சரண்ராஜ், 24; மகேஷ்குமார், 48; ஆகிய இரண்டு பேர் மாட்டு வண்டியில், மணல் கடத்தியது தெரியவந்தது. இதனால், வெங்க மேடு போலீசார், இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ