கிணற்றில் ஆண் சடலம் போலீசார் விசாரணை
கிணற்றில் ஆண் சடலம்போலீசார் விசாரணைகரூர், நவ. 10-கரூர் அருகே, அழுகிய நிலையில் கிடந்த ஆண் உடலை கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் வி.ஏ.ஓ., முருகேசன், 55; இவர், நேற்று முன்தினம் கரூர் அருகே நத்தமேடு பகுதியில் உள்ள, நெடுஞ்செழியன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில், அடையாளம் தெரியாத, 50 வயதுடைய ஆண் உடல் அழுகிய நிலையில், கிடப்பதாக போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, வேலாயுதம்பாளையம் போலீசார், கிணற்றில் இருந்து ஆண் உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கிணற்றில் இருந்து இறந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண், தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணம் உள்ளதா என, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.