மேலும் செய்திகள்
பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா கோலாகலம்
15-Jan-2025
கரூர், :கரூர் மாவட்டத்தில், 300 இடங்களில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தன.கரூர் மாவட்டத்தில், பொங்கல் விழா, உழவர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினத்தையொட்டி, விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. கரூர் டவுன், 30, பசுபதிபாளையம், 18, தான்தோன்றிமலை, 20, வெள்ளியணை, 7, வெங்கமேடு, 37, வாங்கல், 43, க.பரமத்தி, 13, சின்னதாராபுரம், 16, தென்னிலை, 8, வேலாயுதம்பாளையம், 50, குளித்தலை, 65, மாயனுார், 14, பாலவிடுதி, 6, சிந்தாமணிப்பட்டி, 10, லாலாப்பேட்டை, 18 இடங்கள் உள்பட, கரூர் மாவட்டத்தில் போலீஸ் அனுமதியுடன், 300க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை முதல், சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.* கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, கள்ளப்பள்ளி, கருப்பத்துார், மகிளிப்பட்டி, சிந்தலவாடி பகுதிகளில் வசிக்கும் மக்கள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீடுகளை சுத்தம் செய்து, வண்ணக்கோலம் போட்டு சிறப்பு அலங்காரம் செய்தனர். பின், மண்பானையில் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்தனர்.
15-Jan-2025