உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முதுகலை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

முதுகலை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

கரூர், கரூர் பசுபதிபாளையத்தில், அனைத்து முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.மாநில தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களை சார்ந்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர். ஆசிரியர்களுக்கு மிக முக்கிய பிரச்னையாக இருக்கும் தேர்வு பணி ஒதுக்கீடு, ஆசிரியர்களை அச்சுறுத்தும் போக்சோ சட்டம் போன்றவை மீது, அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மாநில பொதுச்செயலர் மகேந்திரன், மாநில பொருளாளர் ஜெயரீகன், மாநில சட்ட செயலர் கார்த்திக், மாநில அமைப்பு செயலர் தங்கபாண்டியன், மாநில மகளிரணி செயலர் விஜி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி