கரூரில் தி.மு.க., முப்பெரும் விழா முன்னேற்பாடு பணிகள் மும்முரம்
கரூர்: கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோடங்கிபட்டி பிரிவு அருகில் வரும், 17ம் தேதி தி.மு.க., சார்பில் முப்பெரும் விழா நடக்கிறது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உட்பட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், முப்பெரும் விழா நடக்கும் மேடை பணிகளை, வீட்டு வச-தித்-துறை அமைச்சர் முத்துசாமி, தி.மு.க., மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.அப்போது, அமைச்சர் முத்துசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:கரூரில் முப்பெரும் விழா நடத்த சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முதலில், ஒரு லட்சம் பேர் அமர இருக்கைகள் போட திட்டமிடப்பட்டது. தற்போது, 3 லட்சத்துக்கும் மேற்பட்-டவர்கள் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு உள்ளது. எனவே, கூடுத-லாக இருக்கைகள் போடப்பட வேண்டும். அதுவும், மிகவும் சிரமமான பணியாக இருக்கும். இங்கு, மிக பெரிய அளவில் மேடை அமைக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.எம்.எல்.ஏ.,க்கள், மாணிக்கம் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநக-ராட்சி துணை மேயர் தாரணி சரவணன் உள்பட பலர் உடனிருந்-தனர்.