ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு
கரூர், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் ராஜா தலைமையில், அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது.அதில் வரும் ஆக., 2ல், இயக்க கொடியை அனைத்து வட்டாரங்களிலும் ஏற்றி வைப்பது, 22ல் சென்னை கோட்டை முன், நடைபெறவுள்ள முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பது, நடப்பாண்டு உறுப்பினர் சேர்க்கையை, 31க்குள் நிறைவு செய்வது உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, செயலாளர் ஜெயராஜ், மாவட்ட துணைத்தலைவர் சத்திய மூர்த்தி, செயலாளர் அமுதன் உள்பட, பலர் பங்கேற்றனர்.