உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் நாளை மறுநாள்தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கரூரில் நாளை மறுநாள்தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கரூர், :கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:கரூர், வெண்ணைமலையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (20ம் தேதி) நடக்கிறது. காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை நடக்கவுள்ளது. முகாமில், சிறப்பாக தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் கீழ் செயல்படும் தனியார் நிறுவனத்திற்கு, பயிற்சியுடன் கூடிய பல்வேறு பணியிடங்களுக்கு பணியாட்கள் தேர்வு செய்யவுள்ளனர்.இதில், 18 முதல், 25 வயதுடைய ஐ.டி.ஐ., வெல்டர், பிட்டர், எலக்ட்ரீஷியன், டி.இ.இ.இ., இ.எம்.இ., ஆகிய ஒவ்வொரு பிரிவிலும், 30 நபர்களுக்கு கப்பல் கட்டும் துறை தொடர்பான பயிற்சி அளித்து பணி நியமனம் அளிக்கவுள்ளனர். 90 நாட்கள் பயிற்சி காலத்தில் உணவு உறைவிடத்துடன், 12 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாகவும், பயிற்சி காலம் முடிந்த பின், 21 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கவுள்ளனர். மேலும், கரூர் மாவட்டத்தை சேர்ந்த இதர தனியார்துறை வேலையளிக்கும் நிறுவனங்களும் கலந்துகொண்டு, 8ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என பல்வேறு கல்வி தகுதியுடைய பணியிடங்களை நிரப்பவுள்ளனர்.வேலை தேடும் இளைஞர்கள் தங்களுடைய சுய விவரகுறிப்பு, உரிய கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைதேடும் இளைஞர்கள், www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். விவரங்களுக்கு 94990-55912 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ