உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விபத்தில் பி.ஆர்.ஓ., போட்-டோகிராபர் பலி

விபத்தில் பி.ஆர்.ஓ., போட்-டோகிராபர் பலி

கரூர்: -கரூர் அருகே, திருகாம்புலியூரை சேர்ந்தவர் மதிவாணன், 56; இவர், கரூர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலக போட்-டோகிராபராக பணி-யாற்றி வந்தார். கடந்த, 23ல் கரூர்-கோவை சாலையில், 'ஸ்கூட்டி பெப்' மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எல்.ஜி.பி., பெட்ரோல் பங்க் எதிரே உள்ள சாலையில் திடீ-ரென குறுக்கே வந்த அடையாளம் தெரியாத நபர் மீது மோதியுள்ளார். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த மதிவாணன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்-தினம் இறந்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ