உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனு கொடுத்த பின் ஆர்ப்பாட்டம்முன்னாள் அமைச்சர் மீது வழக்கு

மனு கொடுத்த பின் ஆர்ப்பாட்டம்முன்னாள் அமைச்சர் மீது வழக்கு

மனு கொடுத்த பின் ஆர்ப்பாட்டம்முன்னாள் அமைச்சர் மீது வழக்குகரூர், :கரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாநகராட்சியுடன், ஆண்டாங்கோவில் கிழக்கு, ஏமூர் பஞ்சாயத்துகள், அரவக்குறிச்சி டவுன் பஞ்சாயத்துடன், வேலம்பாடி பஞ்சாயத்து, பள்ளப்பட்டி நகராட்சியுடன் லிங்கநாயக்கன்பட்டி பஞ்சாயத்து இணைக்கப்பட்டதை கண்டித்து, நேற்று முன்தினம் கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.பிறகு, கரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே, அ.தி.மு.க.,வினர், பொதுமக்கள் கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்படுவதை கண்டித்து, அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து, போலீஸ் எஸ்.ஐ., தில்லைக்கரசி கொடுத்த புகார்படி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட அவைத்தலைவர் திருவிகா உள்பட பலர் மீது, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி