மேலும் செய்திகள்
சாலைப் பணியாளர் ஆர்ப்பாட்டம்
23-Jul-2025
கரூர், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், ஞானசேகரன் தலைமையில், செல்லாண்டிப்பாளையம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், நேற்று ர்ப்பாட்டம் நடந்தது.அதில், சாலை பராமரிப்பு ஊழியர்கள் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என கோஷம் எழுப்பபட்டது. மாநில செயலாளர் குப்புசாமி, மாவட்ட துணைத்தலைவர்கள் நல்லசிவம், மகேந்திரன், செயலாளர் சிங்கராயர், இணைச்செயலாளர் ரமேஷ், பொருளாளர் வெங்கடேஷ்வரன் உள்பட, பலர் பங்கேற்றனர்.
23-Jul-2025