மேலும் செய்திகள்
தொ.மு.ச.,ஆர்ப்பாட்டம்
03-Aug-2026
கரூர்:தமிழ்நாடு செந்தாரகை அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாநில பொருளாளர் செந்தில் குமார் தலைமையில், திருமாநிலையூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், கரூர் மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகளின் சட்ட விரோத நடவடிக்கையை கண்டித்தும், மிகைப்பணிக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும், எட்டு மணி நேர வேலை வழங்க வேண்டும், அனைத்து கிளைகளிலும் டீசல் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பபட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் சுப்பிர மணியன், பொதுச்செயலாளர் நடராஜன், மண்டல செயலாளர் சிவக்குமார், கிளை தலைவர்கள் குமரேசன், பிரபாகரன் கோவிந்தராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.
03-Aug-2026