உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர்: கரூர் கிளை பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம் சார்பில், கிளை தலைவர் ராஜா தலைமையில், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், நலிந்து வரும் பி.எஸ்.என்.எல்., சேவைகளை மத்திய அரசு சீர்ப்படுத்த வேண்டும், அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களை, தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், களவு போகும் பி.எஸ்.என்.எல்., சொத்துக்களை மீட்க வேண்டும், தொழிற்சங்கங்கள் மீது காட்டப்பட்டும், காழ்ப்புணர்ச்சிகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியு-றுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், துணைத்தலைவர் குமரவேல், துணை செயலாளர் கார்த்திகேயன், அருள் செல்வம், சசிகலா, விஜயலட்சுமி, கோமதி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை