கடம்பவனேஸ்வரர் ஆற்றில் சுகாதார சீர்கேடு சரி செய்ய பொது மக்கள் வேண்டுகோள்
குளித்தலை: குளித்தலை, கடம்பவனேஸ்வரர் காவிரி ஆற்றில், இரண்டு நாட்க-ளுக்கு முன்பு மகாளய அமாவாசையொட்டி குளித்தலை, தோகை-மலை, பஞ்சப்பட்டி, அய்யர்மலை, நங்கவரம், நச்சலுார் உள்-ளிட்ட 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்த பொது மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க காவிரி ஆற்றில் நீராடி, புரோகிதர்கள் மூலம் தர்ப்பணம் கொடுத்தனர்.தர்ப்பணம் கொடுக்க பொது மக்கள் கொண்டு வந்த பொருட்-களை, காவிரி ஆற்றின் மணல் திட்டில் வீசி சென்றுள்ளனர். காவிரி ஆற்றின் மணலில், இந்த பொருட்கள் ஆங்காங்கே குப்-பையாக படர்ந்துள்ளது. காவிரி ஆற்றிற்கு நீராட வரும் பொது மக்கள், கடம்பவனேஸ்வரர் கோவிலுக்கு வருவோர் காவிரி மணலில் கிடக்கும் குப்பையால் பாதிப்புக்கு ஆளாகின்றனர். மேலும், குப்பையில்இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. காவிரி ஆற்றில் தர்ப்பணம் கொடுக்க வருவோர் மற்றும் புரோகிதர்கள் நலன் கருதி, குறிப்பிட்ட இடத்தை நகராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். காவிரி ஆற்றின் புனிததன்மையை காக்க அமாவாசை மற்றும் ஈமகாரியம் செய்யவரும் பொது மக்கள், காவிரி ஆற்றின் மணலில் சடங்குகள் செய்ய தடை விதிக்க வேண்டும்.தற்போது, காவிரி ஆற்று மணலில் படர்ந்துள்ள குப்பையை அகற்றிட நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்