உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மீண்டும் புறக்காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மீண்டும் புறக்காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர், கரூர் மாவட்டத்தின் எல்லை பகுதிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில், பல ஆண்டுகளுக்கு முன், போலீஸ் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டது. குறிப்பாக, கரூர்-வாங்கல் சாலை நெரூர் பிரிவில், வெங்கமேடு போலீஸ் ஸ்டேஷன் சார்பில், புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.அதில், போலீசார் ஷிப்ட் முறையில் பணியில் இருந்தனர். வாங்கல் மற்றும் நெரூர் சாலையில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை முன் கூட்டியே அறிந்து, புறக்காவல் நிலையத்தில் உள்ள போலீசார், தகவல் கொடுத்து வந்தனர். இதனால், பல்வேறு பிரச்னைகள் எளிதாக சமாளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், சாலை விரிவாக்கம் மற்றும் பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் வகையில், நெரூர் பிரிவில் உள்ள புறக்காவல் நிலையம் அகற்றப்பட்டது. மீண்டும் புறக்காவல் நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால், அந்த பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள், விபத்து ஆகியவற்றை உடனடியாக தெரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.எனவே, சேதம் அடைந்துள்ள புறக்காவல் நிலையத்தை சீரமைத்து, போலீசாரை வழக்கம் போல் பணியில் அமர்த்த கரூர் மாவட்ட காவல் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை