உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அடிப்படை வசதிகளை கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

அடிப்படை வசதிகளை கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

அடிப்படை வசதிகளை கேட்டுகலெக்டரிடம் பொதுமக்கள் மனுகரூர், டிச. 10-அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என, மருதுார் கணேசபுரம் மக்கள், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது:குளித்தலை அருகே மருதுார் கணேசபுரத்தில், பல குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் மயானம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். போதுமான சாக்கடை கழிவுநீர் வடிகால் வசதியில்லை. இதனால், தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஊர் நடுவில் பாழடைந்த கிணறு உள்ளது. இந்த ஆபத்தான கிணற்றை மூட சொல்லி, பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அடிப்படை வசதியில்லாமல், நீண்ட நாட்களாக திணறி வருகிறோம். இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலரிடம் மனு கொடுத்தும் பயனில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ