அரவக்குறிச்சியில் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில், கொளுத்தும் வெயில் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சி பகுதியில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயிலின் தாக்கம் நிலவி வருகிறது. காலை முதலே வெப்பநிலை உயர்வதால், 11:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள், தினசரி வேலைக்கு செல்வோர், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் வெப்பத்தால் சிரமப்படுகின்றனர். மேலும் உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதால், தங்களை வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, அதிக தண்ணீர் அருந்தி தற்காத்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற நேரங்களில் வெயிலில் செல்ல வேண்டாம் என, மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இதற்கிடையில், குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சில பகுதிகளில் நீர் வினியோக குறைபாடு குறித்து மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.