உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேதமடைந்த நிலையில் பொது கழிப்பிடம்

சேதமடைந்த நிலையில் பொது கழிப்பிடம்

கரூர், கரூர் அருகே, பொது கழிப்பிடம் சேதமடைந்துள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.கரூர் அருகே, கோம்புபாளையம் பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, டி.என்.பி.எல்., காகித ஆலையின் சமுதாய நலப்பணி திட்டத்தின் கீழ், 4.90 லட்ச ரூபாய் மதிப்பில், பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் கழிப்பிடம் சேதமடைந்தது. அதை, கோம்புபாளையம் பஞ்சாயத்து நிர்வாகம் சரி செய்யவில்லை. இதனால், கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல், திறந்த வெளியை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, கழிப்பிடத்தை சீரமைத்துமக்கள் பயன்பாட்டுக்கு விட, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி