உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பராமரிப்பு பணி காரணமாக புகழூர் ரயில்வே கேட் மூடல்

பராமரிப்பு பணி காரணமாக புகழூர் ரயில்வே கேட் மூடல்

கரூர்: புகழூர் ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக, இன்று முதல் வரும், 15 வரை மூடப்படுகிறது.இதுகுறித்து, புகழூர் ரயில்வே ஸ்டேஷன் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கரூர்-ஈரோடு ரயில்வே இருப்பு பாதையில், புகழூர் ரயில்வே கேட் அமைந்துள்ளது. ரயில்வே கேட் அமைந்துள்ள சாலை புன்னம் சத்திரம் மற்றும் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா வரை செல்கிறது. இந்நிலையில், புகழூர் ரயில்வே கேட்டில் இன்று முதல் வரும், 15 வரை, ஐந்து நாட்களில் பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், புகழூர் ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். எனவே, வழக்கமாக புகழூர் ரயில்வே கேட் வழியாக செல்லும் வாகனங்களை, மாற்றுப்பாதைகளில், இயக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை