மேலும் செய்திகள்
ராசிபுரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
08-Jul-2025
குளித்தலை, குளித்தலை அடுத்த சத்தியமங்கலம், பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளியில், நேற்று காலை, 32 லட்சத்து, 80,000 ரூபாய் மதிப்பில், இரண்டு வகுப்பறையுடன் கூடிய புதிய பள்ளி கட்டடம் கட்டும் பணியை, எம்.எல்.ஏ., மாணிக்கம், பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இரணியமங்கலம் பஞ்., வலையப்பட்டியில், 45 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலைய புதிய கட்டடம் கட்டும் பணி, பொய்யாமணி பஞ்., கோரைப்பட்டி - கருங்காடு நங்கவரம் டவுன் பஞ்., சாலை வரை, 17 லட்சத்து, 13,000 ரூபாய் மதிப்பில் புதிய தார்ச்சாலை பணி, நெய்தலுார் பஞ்., சின்னப்பனையூரில், 8 லட்சத்து, 50,000 ரூபாய் மதிப்பில், நாடக மேடை அமைத்தல், ஆலத்துார் பஞ்., மேலப்பட்டி முதல் ஆலத்துார் ஆதிதிராவிடர் காலனி வரை, 17 லட்சத்து, 49,000 ரூபாய் மதிப்பில், புதிய தார்ச்சாலை பணிக்கு எம்.எல்.ஏ., மாணிக்கம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.இரணியமங்கலம் பஞ்., வலையப்பட்டியில் இருந்து பணிக்கம்பட்டி வரை தார்ச்சாலையை, 35 லட்சத்து, 89,000 ரூபாய் மதிப்பில், புதிய தார்ச்சாலை பணி, தளிஞ்சி பஞ்., பேரூர் சிங்கப்பூர் சாலையில், ரெங்காச்சிப்பட்டி காலனி வரை, 42 லட்சத்து, 96,000 ரூபாய் மதிப்பில் புதிய தார்ச்சாலை என, மொத்தம், 2 கோடியே, 13 லட்சம் ரூபாய் மதிப்பில், பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை, நடந்து முடிந்த பணிகளை, எம்.எல்.ஏ., மாணிக்கம் திறந்து வைத்தார்.
08-Jul-2025