உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புலியூரில் சேதமடைந்த நெற்களம் உலர வைக்க முடியாமல் தவிப்பு

புலியூரில் சேதமடைந்த நெற்களம் உலர வைக்க முடியாமல் தவிப்பு

கரூர்; கரூர் மாவட்டம், புலியூர் டவுன் பஞ்சாயத்துக்-குட்பட்ட, 14வது வார்டில் வெள்ளாளப்பட்டி மேலுாரில் நெற்களம் உள்ளது. இப்பகுதியில் கிணற்று மற்றும் நீரேற்று பாசன திட்டம் மூலம் நெல் மற்றும் கம்பு, சோளம் போன்ற தானி-யங்கள் சாகுபடி நடந்து வருகிறது. இங்கு, அறுவடை பின், நெல், தானியங்களை வெள்ளாளப்பட்டி மேலுார் களத்தில் உலர வைத்து வந்தனர். இந்த களம் முறையாகப் பரா-மரிக்கப்படவில்லை என்பதால், சேதமடைந்து கிடக்கிறது. நெற்களம் முழுதும் ஜல்லி கற்கள் பெயர்ந்து, மண் களமாக காட்சியளிக்கிறது. மழை பெய்யும் போது பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நெற்களத்தை சுற்றியும் முள்பு-தர்கள் வளர்ந்துள்ளன. இதனால், களத்துக்கு செல்ல கூட வழியில்-லாமல் உள்ளது. இதன் காரணமாக, விவசா-யிகள் சாலையிலும், தெருக்களிலும் தானியங்-களை உலர வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்-ளனர். இந்த களத்தை சீரமைப்பதற்கான நடவடிக்-கைகளை மேற்கொள்ள வேண்டும் என, விவசா-யிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !