| ADDED : பிப் 23, 2026 06:29 AM
கரூர்; 'கரூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ரயில்வே வாரிய போட்டி தேர்வுக்கு, இணைய வழியில் பயிற்சி வகுப்பு வரும், 25ல் தொடங்கும்' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர், வெண்ணைமலை, வேலை வாய்ப்பு அலு-வலகத்தில், ரயில்வே வாரியம் போட்டி தேர்வுக்-கான, இணைய வழி இலவச பயிற்சி வகுப்பு வரும், 25 ல் தொடங்கிறது. சிறப்பாசிரியர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பயிற்சி நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு-களில் ஸ்மார்ட் போர்டு, அனைத்து போட்டி தேர்-வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலகவசதி, பயிற்சிகால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்-வுகள், வாராந்திர தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள், மென்பாட குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கூடிய கணிணி வசதியுடன் பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.வரும், 23ம் தேதிக்குள், ஆதார்டு கார்டு ஜெராக்ஸ் நகலுடன் நேரில் முன்பதிவு செய்து கொள்-ளலாம். மேலும் விவரங்களுக்கு, 94890- 39848-, 63830 50010 என்ற மொபைல் எண்கள் வாயிலாக தொடர்ப்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்-ளது.