கரூர்: கரூர் மாவட்டத்தில், நேற்று அதிகாலை வரை மழை பெய்தது. அதிகபட்சமாக மாயனுாரில், 24 மி.மீ., மழை பெய்தது. 'டிட்வா' புயல் காரணமாக, கரூர் மாவட்டத்தில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை வரை, கரூர் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. அதிகபட்ச-மாக மாயனுாரில், 24 மி.மீ., மழை பெய்தது. காலை, 8:00 மணி முதல் சற்று வெயில் விட்டு விட்டு தலை காட்டியது. சில பகுதி-களில், வானம் மேக மூட்டமாக இருந்தது. அதைதொடர்ந்து, சாரல் மழை பெய்தது. தொடர் மழையால், பெரிய குளத்துப்பா-ளையம் ரயில்வே குகை வழிப்பாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். கரூர் மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரை, கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,):கரூர், 7.20, அரவக்குறிச்சி, 7.20, அணைப்பாளையம், 4.40, க.பரமத்தி, 4, குளித்தலை, 12, தோகைமலை, 18.60, கிருஷ்ணரா-யபுரம், 17.50, மாயனுார், 24, பஞ்சப்பட்டி, 15.60, கடவூர், 4, பாலவிடுதி, 8, மயிலம்பட்டி, 16 ஆகிய அளவுகளில் மழை பெய்-தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 11.54 மி.மீ., மழை பதி-வானது.மாயனுார் கதவணைகரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை, வினாடிக்கு, 2,690 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி வரை தண்ணீர் வரத்து வினாடிக்கு, 958 கன அடியாக குறைந்தது. காவிரியாற்றில், சம்பா சாகுபடி பணிக்காக, 438 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 520 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.ஆத்துப்பாளையம் அணை க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 37 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 25.52 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அணைப்பகுதியில், 4.2 மி.மீ., மழை பெய்தது.