உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரத்தில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணராயபுரத்தில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணராயபுரம், டிச. 12-கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், பரவலாக சாரல் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமரான்பட்டி, மேட்டுப்பட்டி, வரகூர், சரவணபுரம் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக, மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சோளம், துவரை, கம்பு, கொள்ளு ஆகிய பயிர்களுக்கு மழை நீர் கிடைத்துள்ளது. இதன் மூலம் மானாவாரி பயிர்கள் பசுமையாக செழிப்பாக வளர்ந்து வருகிறது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை